/* */

நாமக்கல்லில் போக்குவரத்து தொழிற்சங்க ஸ்டிரைக்கால் பாதிப்பு இல்லை * அனைத்து பஸ்களும் வழக்கம்போல் ஓடின

Namakkal District Govt Bus Ran As usual நாமக்கல்லில் போக்குவரத்து தொழிற்சங்க ஸ்டிரைக்கால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

HIGHLIGHTS

நாமக்கல்லில் போக்குவரத்து தொழிற்சங்க  ஸ்டிரைக்கால் பாதிப்பு இல்லை  * அனைத்து பஸ்களும் வழக்கம்போல் ஓடின
X

நாமக்கல் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.

Namakkal District Govt Bus Ran As usual

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போக்கள் நாமக்கல்லில் 1,2, ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய 4 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த டிப்போக்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரூட் பஸ்கள், டவுன் பஸ்கள் என 266 பஸ்கள் உள்ளன. பஸ்களில் 585 டிரைவர்கள், 530 கண்டக்டர்கள் என மொத்தம் 1,115 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாமக்கல் 2 டிப்போக்களில் இருந்து 120 பஸ்களும், ராசிபுரத்தில் உள்ள டிப்போவில் இருந்து 81 பஸ்களும், திருச்செங்கோடு டிப்போவில் இருந்து 65 பஸ்களும் என மொத்தம் 266 பஸ்கள் தினசரி போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவு செலவுக்குமான வித்தியாசத்தை அரசு பட்ஜெட்டில் வழங்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 8ம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இருந்த போதிலும் திமுகவின் தொமுச தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, தீரன் தொழற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த தொழிற்சங்க பணியாளர்களைக் கொண்டு, பஸ்களை போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இதன் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளிலும், 100 சதவீதம் அனைத்து பஸ்களும் இயக்கப்படுவதாகவும், கிராமப்புற பேருந்து சேவைகளும் தொடர்ந்து இயக்கப்படுவதாகவும், வரும் நாட்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் வெளியிலிருந்து டிரைவர்களும், கண்டக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு பஸ்கள் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து பஸ்களும் ஓடுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்ல.

Updated On: 9 Jan 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்