/* */

Namakkal Farmers Market One Day Sales நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ. 8.90 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை

Namakkal Farmers Market One Day Salesஇன்று ஒரே நாளில் நாமக்கல் உழவர் சந்தையில்ரூ. 8,90,860 மதிப்புள்ள பொருட்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

Namakkal Farmers Market One Day Sales  நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில்   ரூ. 8.90 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை
X

நாமக்கல் நகரில் செயல்படும் உழவர்சந்தை (கோப்பு படம்)

Namakkal Farmers Market One Day Sales

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இன்று ஒரே நாளில் ரூ. 8,90,860 மதிப்புள்ள பொருட்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் ஆனதால், உழவர் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மொத்தம் 162 விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 18,515 கிலோ காய்கறிகள், 3,750 கிலோ பழங்கள் மற்றும் 25 கிலோ பூக்கள் என மொத்தம் 22,290 கிலோ எடையுள்ள, 62 வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இன்று ஒரே நாளில் ரூ. 8,90,860 மதிப்புள்ள பொருட்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 4,450 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று அக். 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 20 முதல் 40, தக்காளி ரூ.28 முதல் 32, வெண்டைக்காய் ரூ. 36 முதல் 40, அவரை ரூ. 40 முதல் 60 , கொத்தவரை ரூ. 28, முருங்கைக்காய் ரூ. 100, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ. 36 முதல் 40, பாகல் ரூ. 40 முதல் 48, பீர்க்கன் ரூ. 40 முதல் 60, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15, மாங்காய் ரூ. 60 , தேங்காய் ரூ. 20, எலுமிச்சை ரூ. 100, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 70, பெ.வெங்காயம் ரூ. 60 முதல் 65, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ. 80 முதல் 90, கேரட் ரூ. 40 முதல் 48 , பீட்ரூட் ரூ. 40 , உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் 30, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ. 16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ. 40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, கருவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 50, புதினா ரூ. 40, இஞ்சி ரூ.130, பூண்டு ரூ. 100, ப.மிளகாய் ரூ. 30 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ.70, கருணைக்கிழங்கு ரூ.70, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளி ரூ. 50, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ. 15, விளாம்பழம் ரூ. 40.

Updated On: 29 Oct 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க