/* */

Namakkal Govt College Competition கருணாநிதியின் பேச்சாற்றலை இளம் தலைமுறையினர் அறிய வேண்டும்: அரசு கொறடா செழியன்

Namakkal Govt College Competition கருணாநிதியின் பேச்சாற்றலை இளம் தலைமுறையினர் அறிய வேண்டுமென நாமக்கல் கலைக்கல்லுாரி விழாவில் அரசு கொறடா செழியன் பேசினார்.

HIGHLIGHTS

Namakkal Govt College Competition  கருணாநிதியின் பேச்சாற்றலை இளம் தலைமுறையினர் அறிய வேண்டும்: அரசு கொறடா செழியன்
X

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி மாணவிக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் பரிசு வழங்கினார். அருகில் ஆட்சியர் உமா, எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர்.

Namakkal Govt College Competition

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் விழாக்குழுவின் சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். சட்டசபை அரசு தலைமை கொறடா கோவி செழியன் கருத்தரங்கில் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர். கருணாநிதி சட்டசபையில், பேசிய பேச்சு போல் வேறு எவரும் உரையாற்ற முடியாது. சொல் நயம் மிக்க அவரது சட்டப்பேரவையின் பேச்சாற்றலை அடுத்த இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற விழாக்குழு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 100 கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மூலம் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர நிவாரண பொருட்களும் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் தான் மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் 21 லாரிகளில், சுமார் 1.32 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சட்டசபை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் அய்யம்பெருமாள், நாமக்கல் நகராட்சி சேர்மன் கலாநிதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Dec 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...