/* */

நாமக்கல் லோக்சபா தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் :மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

Namakkl BJP District Meet நடைபெற உள்ள பார்லி தேர்தலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாமக்கல் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரி, மாவட்ட பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் லோக்சபா தொகுதியில் பாஜக தலைவர்  அண்ணாமலை போட்டியிட வேண்டும்  :மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்
X

நாமக்கல்லில் பாஜக லோக்சபா தலைமை தேர்தல் அலுவலகத்தை, மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி திறந்து வைத்தார்.


Namakkl BJP District Meet

நாமக்கல் பார்லிமெண்ட் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. பார்லிமெண்ட் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார், சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுருளிமுருகன், வக்கீல் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்லி. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், நடைபெற உள்ள பார்லி தேர்தலில், நாமக்கல் லோக்சபா தேர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பார்லி. தேர்தலில் பிரதமர் மோடி இந்தியாவைக் காப்பாற்ற, பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டார். அதே பிரதமர் தற்போது இந்தியாவை உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது. நோட்டா கட்சி என்று பாஜகவை கிண்டல் செய்தவர்கள் தற்போது பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பயந்துள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்து, இன்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், முன்னோடியாக பார்லி தொகுதி தேர்தல் பாஜக அலுவலகத்தை திறந்துள்ளோம். இந்தியாவில் கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மண்பாண்டம் செய்வோர், தச்சுத்தொழில் செய்வோர், கைவினைஞர்கள், பெண்கள் உள்ளிட்டேர் அனைவரையும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் அண்ணாமலை :

வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை, நாமக்கல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுள்ளோம். அப்படி அவர் போட்டியிட்டால், இந்த தொகுதியில் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெறுவார். தமிழகம் முழுவதும் இப்போது பாஜக அலை வீசுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜ வெற்றிபெறும். இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற 3வது முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று அண்ணாமலை முதல்வராக பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது.

கூட்டணி கட்சிகள் :

பாஜகவை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் நமது கூட்டணிக்கு வருவார்கள். பீகாரில் நிதிஷ்குமார் 9 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை விட்டு விலகிச்சென்றார். அந்த கூட்டணியின் போக்கு பிடிக்காமல் மீண்டும் பாஜகவுக்கு வந்துள்ளார். காலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாலையில் மீண்டும் முதல்வராவதற்க பாஜக உதவி புரிந்துள்ளது.

தேர்தல் பணி :

பாஜக கட்சியைப் பொறுத்தவரை தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் போட்டியிட வாய்ப்பு கிட்டும், எனவே, தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களுக்குள் இருக்கு மனக்கசப்புகளை மறந்து, அனைவரும் ஒருங்கிணைந்து இப்போது முதல் வீடு வீடாகச் சென்று, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். எனவே பெண் நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் முழுமையாக ஈடுபட வேண்டும். கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு கிளைத் தலைவர்களையும் அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளோம்.

தமிழக முதல்வர் :

தமிழக முதல்வர் சென்னையில் நடத்திய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். சாதனை அளவாக ரூ. 6 லட்சம் கோடி புதிய தொழில் துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற கூறினார். தற்போது மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு நேரடியாகச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பெற்ற முதலீட்டிற்கு தொழில் துவங்கிவிட்டு பின்னர் புதிய முதலீடுகளை ஈர்க்கலாம். அவர் கூறுவதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் பதவியில் இருந்து விலகியபோது தமிழகத்திற்கு ரூ. 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போது 8 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த கடன் எப்படி இவ்வளவு அதிகரித்தது. எந்த திட்டத்திற்காக இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பதை முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டும்.

ராமர் கோயில் :

அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் கடந்த 62 ஆண்டுகளுக்கு மேலாக கோர்ட்டில் இருந்த சட்டசிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு ராமர் சிலைபிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிசேக விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இது பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்படவில்லை. பாஜக அரசின் 10 ஆண்டு சாதனைகளை கூறிதான் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினார்.

நாமக்கல் நகர பாஜக தலைவர் சரவணன், நிர்வாகிகள் பிரபு, முத்துகுமார், செந்தில்நாதன், ரோகிணி, மணி, டாக்டர் ஷியாம்சுந்தர், வடிவேல், சுதா, சத்தியபானு, இளவரசி, ராதிகா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 31 Jan 2024 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு