/* */

தென்னையில் அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து டானிக்: விவசாயிகளுக்கு பயிற்சி

தென்னையில் அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து டானிக் பயன்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்னையில் அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து  டானிக்: விவசாயிகளுக்கு பயிற்சி
X

மரூர்ப்பட்டி கிராமத்தில் தென்னையில் அதிக மகசூல் பெறும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், மரூர்ப்பட்டி கிராமத்தில், தென்னையில் அதிக மகசூல் பெற, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் மோகன். முன்னிலை வகித்தார். முசிறி எம்ஐடி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை டானிக் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

தென்னை வேரில் படும்படி டானிக்கை பயன்படுத்துவதால், பச்சையம் அதிகரித்தல், ஒளிச்சேர்க்கை திறன் கூடும், குரும்பை கொட்டுதல் குறையும், தேங்காய் பருப்பின் எடை கூடும், மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த ஊட்டச்சத்து டானிக்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை தென்னை மரத்துக்கு அளிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும் என விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் துணை வேளாண் அலுவலர் ராமசாமி, மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 May 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...