/* */

நாமக்கல் அருகே வரும் 25ம் தேதி விமுக சார்பில் பிஏசிஎல் முதலீடு மீட்பு மாநாடு

நாமக்கல்லில் நடைபெற்ற விவசாய முன்னேற்றக்கழக ஆலோசனைக் கூட்டத்தில், அதன் தலைவர் செல்ல ராஜாமணி பேசினார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே வரும் 25ம் தேதி விமுக சார்பில் பிஏசிஎல் முதலீடு மீட்பு மாநாடு
X

நாமக்கல்லில் நடைபெற்ற விவசாய முன்னேற்றக்கழக ஆலோசனைக் கூட்டத்தில், அதன் தலைவர் செல்ல ராஜாமணி பேசினார்.

நாமக்கல் அருகே வருகிற 25ம் தேதி விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிஏசிஎல் முதலீடு மீட்பு மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு விவசாய முன்னேறக்கழகம் மற்றும் பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, கூட்டத்திற்கு தலமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் 5 கோடியே 85 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அந்த நிறுவனத்தில் ரூ. 49 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த கம்பெனி செயல்படுவதற்கு செபி தடை விதித்ததால், முலீட்டாளர்ளின் பணத்தை திருப்பி வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி லோதா கமிட்டி கடந்த 8 ஆண்டுகளாக முலீட்டாளர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. எனவே மத்திய அரசு பிஏசிஎல் நிறுவனத்தின் ஏழை முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்களை காக்கும் வகையில், இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமித்து, விரைவில் விசாரணையை முடித்து, முதலீட்டுப் பணத்தை திருப்பி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்று லோக்சபா தேர்தல் அறிக்கையில் வெளியிடும் அரசியல் கட்சிக்கே, தமிழகத்தில் உள்ள சுமார் 1 கோடி பிஏசிஎல் முதலீட்டாளர்கள் குடும்பத்தினர் வாக்களிப்பார்கள். தவறினால் வருகிற லோக்சபா தேர்தலைவ புறக்கனிக்க உள்ளோம்.

தமிழகத்தில் விவசாயிகளை காக்கும் வகையில், அரசு மதுபானக்கøளை மூடிவிட்டு தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,000, கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ. 150 வீதம் விலை அறிவிக்க வேண்டும். ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 58 வயது பூர்த்தியடைந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியமாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள வளையப்பட்டி அருகில் வருகிற 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மாநிலம் தழுவிய முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் சுமார் 1 லட்சம் விவசாயிகள், பிஏசிஎல் முதலீட்டாளர்கள், களப்பனியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Feb 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு