/* */

நாமக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழாவில், 45 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.20.24 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம். பி., வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள்  தினவிழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்
X

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை ராஜேஷ்குமார் எம். பி., வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர். 

Namakkal news, Namakkal news today- நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் விழாவில் கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த அனைத்து சிறப்பு பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளையும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.05 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.91 லட்சம் மதிப்பீட்டில் ஈமச்சடங்கு, இயற்கை மரண உதவித்தொகை, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21000 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.24 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை பேசியதாவது:

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியை அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாளாக ஐ.நா.சபை அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக நாடுகளால், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கமும் சேவை வழங்கும் தொண்டு நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். தமிழக முதல்வர் அவர்கள் உரிமைகள் திட்டம் (Rights Project) உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1700 கோடி மதிப்பிலுள்ள 10 ஆண்டுகளுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் மேம்பட அவர்களை ஒருங்கிணைத்தல், அவர்களுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவர்களுக்கு தங்குதடையற்ற சூழல் உருவாக்குதல் திட்டத்தை வெளியிட்டுள்ளார். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவைமையம் (ONESTOP CENTRE) தொடங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகள் மற்றும் பராமரிப்புகளுடன் மாவட்ட தலைநகரத்தில் இருந்து 100கி.மீ.க்கு மிகாமல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியங்களில் கலை நிகழ்வுகள் மற்றும் தெரு முனை நாடக நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வரை 47,238 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அதில் 38,000 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) விண்ணப்பம் பெறப்பட்டு அதில் 19,620 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 55 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டமான நலவாரியம் 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 31,855 பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி. ராஜேஸ்குமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Dec 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...