/* */

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை: பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை: பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்
X

நாமக்கல் நகரில் ஒருவரது வீட்டில் சூரியனுக்கு பொங்கல் படையலிட்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

பொங்கல் என்பது தமிழர்களால், மார்கழி மாதம் கடைசி நாளில் துவங்கி தை மாதம் 3ம் நாள் வரை மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் வசிக்கும், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கும், ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செல்லும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

விவசாயிகள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாத கடைசி நாளான நேற்று போகிப் பண்டிகை நடைபெற்றது. அதையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றம் கழனிகளை சுத்தும் செய்து, காப்புக்கட்டி கொண்டாடினார்கள்.

இன்று தை 1ம் தேதி பொங்கல் பண்டிகை வீட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தை மாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியைக் கொண்டு பால், சர்க்கரை, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புதுப் பானை, புது அடுப்பில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கும் வேளையில், பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியபகவானை வழிபட்டனர். பின்னர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் வழங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.

நாளை 16ம் தேதி மாட்டுப்பொங்கல் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், மாடுகள் மற்றும் கால்நடைகளை, குளிப்பாட்டி, பொட்டு வைத்து அழகுபடுத்தி, மாட்டுப் பொங்கல் வைத்து அதை கால்நடைகளுக்கு படைத்து, அவர்களும் சாப்பிடுவது நாளைய மாட்டுப் பொங்கலின் சிறப்பாகும். பொங்கல் படையலில் முக்கியமாக மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக் காய்கறி வகைகள் சேர்க்கப்படுகிறது.

வருகிற 17ம் தேதி புதன்கிழமை காணும் பொங்கல் விழா மற்றும் கரிநாள் நடைபெறுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பாக காவரிக்கரையோரங்களில் வசிக்கும் பொதுக்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஆற்றங்கரைகளுக்குச்சென்று கூடிப்பேசி, சிற்றுண்டிகளை பகிர்ந்து உண்டு, விளையாண்டு மகிழ்வது வழக்கம். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், ப.வேலூர் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 15 Jan 2024 7:39 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு