/* */

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்!
X

பைல் படம் : நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல், மார்ச். 8-

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு கோருதல், செல்போன் நம்பர் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்வதற்காக ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் 2ம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேசன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் முகாம், நாளை 9ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர். சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பெண்களின் ஆரோக்கியம்: காக்க வேண்டிய பொக்கிஷம்!

எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கும், இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 March 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...