/* */

முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்ய கோரிக்கை

முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல்  கலந்தாய்வை ரத்து செய்ய கோரிக்கை
X

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு.

முதுகலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்து, பொது மாறுதலின்போது நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 1.8. 2023 அன்று நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் உபரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்திடுதல் தொடர்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையில், அளவில் முதுகலை ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முதல் நாள், பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது ஒரு கல்வியாண்டின் முதல் பள்ளி வேலை நாளைக்கு முந்தைய நாள் முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அதனை விடுத்து தற்போது, முதுகலை ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்வதைப் பள்ளிக்கல்வித்துறை தவிர்த்திட வேண்டும்.

தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு விரைவில் வர உள்ளது. எனவே அதற்காக முழு பாடங்களையும் நடத்தி முடிப்பதற்கான கற்றல் கற்பித்தல் பணிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைக்கும் முயற்சியிலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறவும் முதுகலை ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 75 சதவீதம் பாடங்கள் நிறைவு பெற்று, பொதுத்தேர்வு நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு மாணவர்களையும் சரிவர புரிந்து அவர்களின் நிறை குறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி வரும் முதுகலை ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி வரும் 20ம் தேதி திங்கள்கிழமை பணி நிரவல் செய்வதைத் தற்போது தவிர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2023 6:54 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?