/* */

பள்ளிபாளையம், கொமாரபாளையம் பகுதியில் ரூ.5.59 கோடி திட்டப்பணி: அமைச்சர் துவக்கம்

பள்ளிபாளையம், கொமாரபாளையம் பகுதிகளில் ரூ. 5.59 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம், கொமாரபாளையம் பகுதியில் ரூ.5.59 கோடி திட்டப்பணி: அமைச்சர் துவக்கம்
X

கொமாரபாளையம் நகராட்சியில், புதிய வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகளை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் உமா.

நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் நகராட்சி, எடப்பாடி சாலையில் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக வாரச்சந்தை அமைக்கும் பணி, வார்டு எண்.14 ராஜாஜி குப்பத்தில் ரூ.24.96 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பறை கட்டும் பணி, பள்ளிபாளையம் நகராட்சி, கண்டிப்புதூர் நகராட்சி துவக்கப்பள்ளிக்கு ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் காட்டும் பணி, ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டும் பணி, நாட்டாகவுண்டன்புதூர் நகராட்சி துவக்கப்பள்ளிக்கு ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் காட்டும் பணி, ஆவரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளிக்கு ரூ.32.00 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் காட்டும் பணி என மொத்தம் ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்துப் பேசினார்.

கொமாரபாளையம் வாரச்சந்தை :

கொமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை, எடப்பாடி சாலையில், திறந்தவெளி மைதானமாக தற்சமயம் இயங்கி வருகிறது. கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 3.60 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை கட்டிடம் அமைக்கப்படுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் 144 உட்புற தளக் கடைகள், 24 வணிக வளாகக் கடைகள், 1 சுகாதார வளாகம், 4900 சதுர மீட்டர் உட்புற சாலைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொமாரபாளையம் சமுதாயக்கழிப்பிடம் :

கொமாரபாளையம் நகராட்சி வார்டு எண்.14 ராஜாஜி குப்பம் பகுதியில் உள்ள சமுதாய கழிப்பிடம் 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கழிப்பிடம் மிகவும் பழுதடைந்து மராமத்து பணிகள் மேற்கொள்ள இயலாத நிலையில், புதியதாக கழிப்பிடம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 24.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட உள்ள சமுதாய கழிப்பிடத்தில் 12 ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் இருக்கைகள், 4 சிறுநீர் கழிப்பறைகள், 4 குளிக்கும் அறை, துணி துவைக்கும் மேடை, நாப்கின் இயந்திரம் அமைக்கப்படுகிறது.

பள்ளிபாளையம் பள்ளி கட்டிடங்கள் :

பள்ளிபாளையம் நகராட்சிக்கு மாநில நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகள் மற்றும் மாநில நிதிக் குழு உட்கட்டமைப்பு திட்டத்தன் கீழ் ரூ.1.74 கோடி மதிப்பில் 4 பணிகள், பள்ளிபாளையம் நாட்டாகவுண்டன்புதூர் நகராட்சி துவக்கப்பள்ளி, கண்டிப்புதூர் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் ஆவாரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அங்கன்வாடி மையம்:

எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 12.61 லட்சம் மதிப்பீட்டில் அகரம் குக்கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் கொமாரபாளையம் நகராட்சித் தலைவர் விஜய்கண்ணன், பள்ளிபாளையம் நகராட்சித் தலைவர் செல்வராஜ், அட்மா குழுத்தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Dec 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...