/* */

எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

எஸ்.வாழவந்தி ஸ்ரீ செல்லாண்டியம்மன் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

எஸ்.வாழவந்தி ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருவிழாவில், திரளான பக்தர்கள் சுவாமியை தூக்குத்தேரில் வைத்து தூக்கிச்சென்றனர்.

எஸ்.வாழவந்தி ஸ்ரீ செல்லாண்டியம்மன் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர் அருகில் உள்ள, எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று, மதியம் 2 மணிக்கு, சுவாமி தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, எஸ்.வாழவந்தி பகுதியில் மாவிளக்கு பூஜையும், எல்லை உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. உயிருடன் உள்ள செம்மறி ஆட்டின் ஈரல் எடுத்து சுவாமி மடியில் வைத்து பூஜை செய்து பூசாரி வாயில் வைத்து ஊமை புலி குத்தும் நிகழ்ச்சி பக்திரபரவசத்துடன் நடைபெற்றது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

அதையடுத்து, சுவாமி தூக்கு தேரில் சின்னகரசபாளையம், பெரியகரசப்பாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம், முத்தூர், ஆண்டிபாளையம், வடக்கு தீர்த்தாம்பாளையம், மோளக்கவுண்டனூர், குட்லாம்பாறை, கே.அய்யம்பாளையம், நொச்சிப்பட்டி, கே.புதுப்பாளையம் அக்கரையாம்பாளையம், புளியம்பட்டி, வள்ளியப்பம்பட்டி, வள்ளியப்பம்பட்டிபுதூர் உள்ளிட்ட, 18 கிராமங்களில் வலம் வந்தது. இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர், கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 9 May 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  2. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  3. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  7. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  8. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  9. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  10. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!