/* */

Senior Citizen Home Inspection தொண்டு நிறுவன முதியோர் காப்பகம் மகளிர் ஆணையத் தலைவர் திடீர் ஆய்வு

Senior Citizen Home Inspection பரமத்தி வேலூர் அருகே செயல்பட்டு வரும், தனியார் தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தை, மாநில மகளிர் ஆணையத் தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

Senior Citizen Home Inspection  தொண்டு நிறுவன முதியோர் காப்பகம்  மகளிர் ஆணையத் தலைவர் திடீர் ஆய்வு
X

ப.வேலூர் அருகே செயல்பட்டுவரும், தொண்டு நிறுவன முதியோர் காப்பகத்தை, மகளிர் ஆணையத்தலைவர் குமாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Senior Citizen Home இன்ஸ்பெக்ஷன்

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் அரசிடம் பதிவு பெற்று இயங்கி வருவதோடு அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களின் சேவைகளில் ஒன்றுதான் முதியோர் இல்லத்தை பராமரித்தல் ஆகும். இதனை அவர்கள் உரிய முறையில் இயக்கி வருகின்றார்களா? என அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்துவதோடு அங்கு தங்கியிருப்பவர்களின் குறைகளையும் கேட்டறிவதுண்டு. அந்த வகையில்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கொந்தளம் கிராமத்தில் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பில், முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர்கள் இலவசமாக தங்க வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முதியோர் இல்லத்தை, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி திடீர் ஆய்வு செய்து, பார்வையிட்டார்.

காப்பகத்தில் உள்ள முதியவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறார்களா, அவர்களுக்கு தேவையான வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்றும், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, காலை, மதியம் மற்றும் இரவு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களிடம் அவர் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆதரவற்ற முதியோருக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பிரபா, அரசுத்துறை அலுவலர்கள், வேண்டு தொண்டு நிறுவன செயலாளர் சிவகாமவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Nov 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...