/* */

நாமக்கல்லில் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு 1,249 பேர் பங்கேற்பு : 50 பேர் ஆப்செண்ட்

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித் தேர்வில் 1,249 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். 50 பேர் தேர்வுக்கு வரவில்லை.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு  1,249 பேர் பங்கேற்பு : 50 பேர் ஆப்செண்ட்
X

Namakkal news- நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித் தேர்வில் 1,249 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். 50 பேர் தேர்வுக்கு வரவில்லை.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய பயிற்றுனர்கள் பணிக்கான போட்டித்தேர்வு, இன்று நாமக்கல்லில் 4 மையங்களில், காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தேர்வு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 368 பேரும், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 396 பேரும், நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 273 பேரும், நாமக்கல் ஜெய்விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் 262 பேரும் என மொத்தம் 1299 பேர் தேர்வு எழுவதுவதற்கான ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பார்வை குறைபாடு உள்ள 5 விண்ணப்பதாரர்களுக்கு, உதவியாளர் நியமனம் செய்யப்பட்டு அவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 368 பேருக்கு பதிலாக 354 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள், 14 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 396க்கு பேருக்கு பதிலாக 373 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள் 23 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 273 பேருக்கு பதிலாக 263 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 10 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. நாமக்கல் ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 262 பேருக்கு பதிலாக 159 பேர் தேர்வு எழுதினாகள், 3 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. நாமக்கல்லில் உள்ள 4 மையங்களிலும் சேர்த்து மொத்தம் 1299 பேருக்கு பதில், 1249 பேர் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 50 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

Updated On: 4 Feb 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...