/* */

தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசு உத்தரவு வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

Teachers Association Meet தமிழக அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்ட டிட்டோ ஜாக் கோரிக்கைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசு உத்தரவு வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் கலந்துகொண்டு பேசினார்.

Teachers Association Meet

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நாமக்கல் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒன்றிய, நகராட்சி பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு பணிமூப்பினை (block level seniority), மாநில பணிமூப்பு முறைக்கு (state seniority) மாற்றும் அரசாணை எண்243 ஐ உடனடியாக ரத்து செய்யவேண்டும். பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் ஏற்பளிக்கப்பட்ட டிட்டோஜாக்கின் 12 அம்சக் கோரிக்கைகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும்..தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் 2 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வரும் 27 ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் பட்டினிப் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆயா, அலுவலக அடிப்படைப் பணியாளர், இளநிலை உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், நைட் வாட்ச்மேன் நியமிக்கப்பட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் முழுத் தூய்மை சுகாதாரம் பேணப்படும் வகையில் முழு நேர துப்புரவு, தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள் மற்றும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி கொடுத்து, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பவை உட்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டம் முழுதும் இருந்து 25 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மாநிலச் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவாஜாய் நன்றி தெரிவித்தார்.

Updated On: 20 Jan 2024 9:45 AM GMT

Related News