/* */

நாமக்கல் அரசு போக்குரவத்து கழக டெப்போவில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தள வசதி துவக்கம்

Transport Depo Ground Floor Inauguration நாமக்கல் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தரை தளத்தை கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு போக்குரவத்து கழக டெப்போவில்  ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தள வசதி துவக்கம்
X

நாமக்கல் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தரை தளத்தை கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். அருகில் சின்ராஜ், எம்.பி.,

Transport Depo Ground Floor Inauguration

நாமக்கல் நகரில், பரமத்தி ரோட்டில் சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக டெப்போ அமைந்துள்ளது. இந்த டெப்போவிற்கு, நாமக்கல் பார்லிமெண்ட் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தரை தளம் அமைக்க, நாமககல் லோக்சபா எம்.பி. சின்ராஜ் நிதி ஒதுக்கீடு அளித்தார். தரை தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய தரைத்தள வசதி துவக்க விழா அரசு போக்குவரத்து கழக டெப்போவில் நடைபெற்றது. நாமக்கல் லோக்சபா எம்.பி. சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கொங்குநாடு மககள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தரைத்தள கல்வெட்டினைத் திறந்து வைத்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், அரசு போக்குரவத்து கழக நாமக்கல் கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு, கிளை மேலாளர்கள் மகேஷ்வரன், துரைசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டல தீரன் தொழிற்சங்க பேரவை மண்டல தலைவர் செல்வகுமார், மண்டல செயலாளர் கோபிநாத், மண்டல துணை செயலாளர்கள் கண்ணையன், சதீஷ்குமார், கிளை செயலாளர்கள் செல்லையா, சுரேஷ், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 10 March 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...