/* */

Voter List Correction Special Camp வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை முதல் 2 நாட்கள் சிறப்பு முகாம்

Voter List Correction Special Camp நாமக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம், சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

Voter List Correction Special Camp  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க   நாளை முதல் 2 நாட்கள் சிறப்பு முகாம்
X

Voter List Correction Special Camp

நாமக்கல் மாவட்ட ஆட்சியர், உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நாளை 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

எனவே, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கும் சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்திடுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 24 Nov 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  4. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  5. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  9. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  10. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்