/* */

காய்கறிக் கடையில் பணப்பை திருடிய பெண் கைது: போலீஸ் விசாரணை

நாமக்கல் சந்தையில் வியாபாரம் செய்தவரிடம், பணப்பையை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காய்கறிக் கடையில் பணப்பை திருடிய பெண் கைது: போலீஸ் விசாரணை
X

காய்கறிக்கடையில் பணப்பை திருடிய பழனியம்மாள்.

நாமக்கல் சந்தையில் வியாபாரம் செய்தவரிடம், பணப்பையை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தா (37). இவர் நகராட்சி அலுவலம் அருகில் உள்ள, பெரிய சந்தையில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 16ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில், இவரது கடைக்கு வந்த, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தக்காளி ஒரு கிலோ என்ன விலை என்று கேட்டுள்ளார். அதற்கு வசந்தா ஒரு கிலோ ரூ. 30 என்று கூறியுள்ளாளர். தனக்கு ஒரு கிலோ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்காக தக்காளியை பொறுக்கி எடை போடும்போது, அவரது கவனத்தை திசை திருப்பிய, அங்கு நின்றிருந்த பெண், காய்கறி வியாபாரி வசந்தா பணம் வைத்திருந்த மஞ்சப்பையை நைசாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவத் தொடங்கினார். இதை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்துக்கடையில் இருந்த வியாபாரி, மர்மப் பெண்ணை பிடித்துக்கொண்டார். பின்னர் அருகிலிருந்த காய் கடைகாரர்கள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை விசாரித்தபோது, அவர் புதன்சந்தை அருகில் உள்ள காரைகுறிச்சியை சேர்ந்த பழனியம்மாள் (40) என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து காய்கறிக்கடைக்கார்கள் பழனியம்மாளை நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரிடம் விசாரைண நடத்தியலோது, ஏற்கனவே அந்த பெண்ணின் மீது, சேலத்தில் திருட்டு வழக்குப் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு