/* */

சென்னையில் 7ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு: நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு

சென்னையில் வருகிற 7ம் தேதி நடைபெறும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னையில் 7ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு: நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு
X

பைல் படம்

சென்னையில் வருகிற 7ம் தேதி நடைபெறும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வருகிற, 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 (ஜிஐஎம்) நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த மாநட்டிற்கு தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் தொழில்துறையின் அனைத்து தரப்பினர் மற்றும் மாணவர்களை பங்கு பெற செய்வது அரசின் நோக்கமாகும். இந்த உலக முதவீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா, சென்னையில் 7ம் தேதி காலை 9.30 மணி முதல் 11.45 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட தொழில்துறை கூட்டமைப்புகள், தொழில்துறை தலைவர்கள், எம்எஸ்எம்இ, சிட்கோ மற்றும் நாமக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்குபெரும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா, நாமக்கல் கவிஞர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரி, டிரினிட்டி சி.பி.எஸ்.சி பள்ளி, நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனங்கள், பேளுக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவரும் காணும் வகையில் டிஎன்ஜிஐஎம்.2024.காம் என்ற வெப்சைட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளையும் கண்டு பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jan 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?