நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் நேரடித்தேர்வு : 10 பேருக்கு வேலை வாய்ப்பு

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்    நேரடித்தேர்வு : 10 பேருக்கு வேலை வாய்ப்பு
X

பைல் படம் 

நாமக்கல்லில் நடைபெற்ற நேரடித் தேர்வில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் நடைபெற்ற நேரடித் தேர்வில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். சேலம் மண்டல வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ், நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை நடந்த நேரடித் தேர்வில், மாவட்டம் முழுவதும் இருந்து, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில், டிரைவர் 3 பேர், மருத்துவ உதவியாளர் 7 பேர், என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம், உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை நர்சிங் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 10 நாட்களுக்கு சென்னையில் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில், 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story