/* */

ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் மரங்கள்வெட்டப்பட்டதாக புகார்: அதிகாரிகள் விசாரணை

Temple Tree Cut Complaint Enquiry ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் மரங்கள்வெட்டப்பட்டதாக புகார்: அதிகாரிகள் விசாரணை
X

  (பைல்படம்)

Temple Tree Cut Complaint Enquiry

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை அனுமதியின் பேரில், இந்த கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் வளாகத்தின் பின்புறம் உள்ள நந்தவனத்தில், பழமை வாய்ந்த அத்தி மரம் தற்போது வெட்டப்பட்டுள்ளது. இந்த மரம் கோயில் பராமரிப்புப் பணி வசதிக்காக வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல கோயில் முன்பாக உள்ள வன்னி மரத்தின் கிளைகளும் வெட்டப்பட்டுள்ளன. இந்த மரங்கள் முறையான அனுமதியில்லாமல் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவனர் நல்வினைச்செல்வன், பாமக நிர்வாகிகள் மோகன்ராஜூ, பாலு, நகர வளர்ச்சி மன்றத் தலைவர் பாலு உள்ளிட்டோர், கோயிலுக்கு சென்று, அப்பகுதியை நேரில் பார்வையிட்டு, வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் தங்கம், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். கோயில் நிர்வாக அலுவலர் நந்தகுமாரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொதுமக்களின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்.

Updated On: 1 Jan 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?