பிளஸ் 2 படித்துவரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 5ம் தேதி நாமக்கல்லில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படித்து வரும், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 5ம் தேதி சனிக்கிழமை, நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் உள்ள, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், ஆலோசனை நிகழ்ச்சிக்கு வருகின்ற மாணவ மணவிகள் தங்களது இஎம்ஐஎஸ் எண் விவரத்தினை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu