கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை நிறுவனர் கோவை செழியன் நினைவேந்தல் நிகழ்ச்சி

கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை நிறுவனர்    கோவை செழியன் நினைவேந்தல் நிகழ்ச்சி
X

நாமக்கல்லில் நடைபெற்ற கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியன் நினைவு நாள் நிகழ்ச்சியில், மாதேஸ்வரன். எம்.பி., கலந்துகொண்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்லில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல்லில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், எம்.பி., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கோவை செழியனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கொமதேக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் பழனிமலை, தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் செந்தில் ராஜா, இணை செயலாளர்கள் ரமேஷ் குமார். சீனிவாசன், தமிழரசு, மாவட்ட பொருளாளர் சசிகுமார் மாவட்ட வக்கீல் அணி தலைவர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பிரகதீஸ்வரன், ஜெகதீசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலுசாமி, ஐடி பிரிவு செயலாளர் மனோஜ், செய்தி தொடர்பாளர் ரமேஷ், நகரச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டு கோவை செழியன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story