/* */

உதகையில் 16 புதிய பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு

நீலகிரி மாவட்டத்தில் 16 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

உதகையில் 16 புதிய பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு
X

நீலகிரி மாவட்டத்தில் ரூ.8.32 கோடி மதிப்பில் 16 புதிய பேருந்துகள் விரிவாக்க சேவை தொடக்க விழா உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தார். திட்ட இயக்குநா் (சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்) கெளசிக் முன்னிலை வகித்தார். பேருந்து விரிவாக்க சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோர் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பேசியதாவது: உதகையில் மகளிருக்காக 11 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 99 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இலவச பயணத்தால் மிச்சமாகும் பணத்தில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும், மருத்துவச் செலவுக்கும் உபயோகமாக உள்ளதாக பெண்கள் கூறியுள்ளது மாநில திட்டக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இந்த அரசின் சாதனை. நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டீசல் மானியத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முதல்வா் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் வரும் காலங்களில் அனைத்து இடங்களிலும் புதிய பேருந்துகளாக இயக்கப்படும் என்றார்.

சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பேசுகையில், கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து விரிவாக்கம் இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Updated On: 26 Feb 2024 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  7. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  8. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  10. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...