/* */

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

போதுமான அளவில் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில்அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளைமாவட்ட ஆட்சித்தலைவர் .மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், பொதுமக்கள் நோயில்லா நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இன்றையதினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இம்மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் மற்றும் இருப்பு கோப்புகள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவது குறித்தும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் வருகைகள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனையினை சுகாதாரமான முறையில் பராமரித்திடவும், போதுமான அளவில் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மருத்துவமனைக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நாள்தோறும் மருத்துவமனைகளில் நடைபெறும் மகப்பேறு எண்ணிக்கைகள் குறித்தும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளிலிருந்து மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்துவது குறித்தும் மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தேவையான இடவசதிகளை மேம்படுத்தவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனவே தமிழக அரசால் மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, அரசு தலைமை மருத்துவர்கள் மரு.சரண்யா (மணமேல்குடி), மரு.முகமதுஅலி ஜின்னா (ஆவுடையார்கோவில்), வட்டாட்சியர்கள் திரு.முகமது சேக் அப்துல்லா, திரு.மார்டின் லூதர்கிங் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், பொதுமக்கள் நோயில்லா நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இம்மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் மற்றும் இருப்பு கோப்புகள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவது குறித்தும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் வருகைகள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனையினை சுகாதாரமான முறையில் பராமரித்திடவும், போதுமான அளவில் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மருத்துவமனைக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நாள்தோறும் மருத்துவமனைகளில் நடைபெறும் மகப்பேறு எண்ணிக்கைகள் குறித்தும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளிலிருந்து மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்துவது குறித்தும் மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தேவையான இடவசதிகளை மேம்படுத்தவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனவே தமிழக அரசால் மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, அரசு தலைமை மருத்துவர்கள் மரு.சரண்யா (மணமேல்குடி), மரு.முகமதுஅலி ஜின்னா (ஆவுடையார்கோவில்), வட்டாட்சியர்கள் முகமது சேக் அப்துல்லா, மார்டின் லூதர்கிங் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Nov 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...