/* */

போலி தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப்பெற்றவர்கள் மீது நடவடிக்கை

புதுக்கோட்டையில் நடைபெற்ற வருமான வரி விழிப்புணர்வு கூட்டத்தில் வருமானவரி அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்

HIGHLIGHTS

போலி தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப்பெற்றவர்கள் மீது  நடவடிக்கை
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருமான வரி துறை சார்பாக  நடைபெற்ற வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருமான வரி துறை சார்பாக வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கூட்டல்த்துக்கு வருமான வரி கூடுதல் ஆணையர் நித்யா தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அதிகாரி ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்..

இதில் தஞ்சாவூர் வருமான வரி உதவி ஆணையர் சீனிவாசன், வருமான வரி அதிகாரிகள் சு. வில்விஜயன், ராஜசேகர், சுரேஷ்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்திற்கு உட்பட்ட பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இக்கூட்டத்தில் வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும், போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான தீர்வாக திருத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தாக்கல் செய்து தவறை திருத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட தகவல்களை அனைத்து பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள் தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

Updated On: 1 Dec 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த