/* */

சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரித்த ராதிகா..!

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரித்த ராதிகா..!
X

அருப்புக்கோட்டையில் சமுதாய தலைவர்களிடம் ஓட்டு சேகரித்த ராதிகா, அவரது கணவர் சரத்குமார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா நேற்று அருப்புக்கோட்டையில் பல்வேறு சமுதாயத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

சாலியர் உறவின்முறை, நாடார் உறவின்முறை, அகமுடையார் உறவின்முறை, தேவாங்கர் உறவின்முறை, கள்ளர் மற்றும் மறவர் உறவின்முறை, செங்குந்த முதலியார் உறவின்முறை, ஜெயவிலால் குழுமம், செம்பட்டி முத்தரையர் உறவின்முறை, பாளையம்பட்டி முத்தரையர் உறவின்முறை நிர்வாகிகள், முக்கியஸ்தர்களை சந்தித்து நடிகை ராதிகா வாக்கு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து, காமராஜர் சிலை, தேவர் சிலை, முத்தரையர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அருப்புக்கோட்டை பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

இதற்கு முதல்நாள் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க., நிர்வாகிகள் சரியாக பிரசார ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற அதிருப்தியில் பிரசாரத்தை பாதியில் ரத்து செய்து விட்டு, ராதிகா சென்னை சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் சென்னை பா.ஜ.க., தலைமை தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து கட்டளைகள் பிறப்பித்ததன் அடிப்படையில் தற்போது ராதிகாவின் பிரசாரம் சீரான நிலையில் சென்று கொண்டுள்ளது.

Updated On: 30 March 2024 5:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு