உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜ.கண்ணப்பன்: முதல்வர் அறிவிப்பு.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில், 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது. இதனால் அமைச்சர் பொறுப்பும் தானாகவே பறிபோய்விடும்.
பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அடுத்து யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேசிடமே கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை பொறுப்பும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், த் தகவல்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu