/* */

சேலம் மாவட்டத்தில் 18 முதல் 27ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்

சேலம் மாவட்டத்தில் 18 முதல் 27ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 18 முதல் 27ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்
X

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறவுள்ளது.

ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Dec 2023 7:22 AM GMT

Related News

Latest News

  1. போளூர்
    கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
  2. திருவண்ணாமலை
    அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பேரணி
  3. ஆரணி
    ஆரணி அருகே திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டர்கள்: கிராம மக்கள்
  4. வேலைவாய்ப்பு
    சென்னை உயர் நீதிமன்றத்தில் 2,329 காலியிடங்கள்
  5. திருவண்ணாமலை
    சவுக்கு சங்கரை கைது செய்தது சரியே: டிடிவி தினகரன்
  6. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு நல்லது வெந்நீர், குளிர்ந்த நீர் - எதுவென்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அகத்தி கீரை பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! அரிசி கழுவிய நீரில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?