நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன : கலெக்டர்

புதுச்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் கலெக்டர்உமா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அருகில் நீதிபதிகள்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டள்ளதக கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது;
ஏழை மக்களுக்கு அனைத்து சட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும், சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகப்படுத்தவும், பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வனம் மற்றும் பசுமைப் பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் வனம் மற்றும் பசுமை பரப்பானது 14 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 10.21 லட்சம் மரக்கன்றுகளும், 2024-ஆம் ஆண்டு 9.75 லட்சம் மரக்கன்றுகளும் என மொத்தம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நடப்பட்டுள்ளன. மரங்களை நடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்களும் இந்த முன்னெடுப்பில் பங்கெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒன்று அல்லது 2 மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து முறையாக பராமரிக்க முன்வர வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் சிஜேஎம் கோர்ட் நீதிபதி விஜயகுமார், போலீஸ் ஏடிஎஸ்பி விஜயராகவன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் .திருகுணா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலர் நீதிபதி வேலுமயில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu