நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில்    அம்பேத்கார் பிறந்த நாள் விழா
X

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் நடைபெற்ற, அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துப்பட்டது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில்அம்பேத்கார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில்அம்பேத்கார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் அம்பேத்காரின் 134-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நூலக வாசகர் வட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றார். நாமக்கல் மனவளக்கலை மன்ற செயலாளர் வி.கே.எஸ். மணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தி சிலை அமைப்புக் குழு இணை செயலாளர் ஜவகர் கலந்துகொண்டு அம்பேத்கார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓய்வு பெற்ற தொலைத் தொடர்பு அலுவலர் ராமசாமி அம்பேத்காரின் சிறப்புகள் குறித்துப் பேசினார். மேலும் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் ரபிக், கிருஷ்ணகுமார், கருப்பண்ணன், அமல்ராஜ், நரசிம்மன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேசபக்தி உறுதிமொழி ஏற்றனர். முடிவில் நாமக்கல் மாவட்ட நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் சங்க தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.

Next Story