விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு நேரடி கொள்முதல் : கலெக்டர்

விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு    நேரடி கொள்முதல் : கலெக்டர்
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில் நாபெட் மூலம், விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நாபெட் மூலம், விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயைப் பெருக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாசிப்பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் பயிர்செய்த பாசிப்பயிறு மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது உள்ளுர் சந்தைகளில் பாசிப்பயிறு கிலோ ஒன்றுக்கு ரூ. 65 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி குறைந்த பட்ச ஆதரவு விலையில் (கிலோ ஒன்றுக்கு ரூ.86.82-) கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயிறு கொள்முதல் திட்டம், நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் பேங்க் கணக்குப் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். (செல்போன் எண்: 9566647333)

மேலும் பாசிப்பயிறு விற்பனைக்கான தொகை விவசாயிகளின் பேங்க் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். வருகிற 12.6.2025 வரை விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளின் நலன் கருதி அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story