/* */

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.22) இன்று காலை 8 மணி நிலவரப்படி 54.83 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.22) இன்று காலை 8 மணி நிலவரப்படி 54.83 அடியாக சரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 79 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 55.00 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 54.83 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.98 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 22 April 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...