/* */

மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க திட்டம்..! பட்ஜெட்டில் அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையின் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டார்.

HIGHLIGHTS

மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க திட்டம்..!    பட்ஜெட்டில் அறிவிப்பு..!
X

Tamil Nadu Budget 2024-பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

Tamil Nadu Budget 2024

2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பேரவையில் தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

Tamil Nadu Budget 2024

தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

▪️ சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு

▪️ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்

▪️ தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

▪️ முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்

▪️ ரூ. 65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்

▪️ கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்

▪️ கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்

▪️ சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்

▪️சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு!

Tamil Nadu Budget 2024

▪️ 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி ஒதுக்கீடு

▪️ 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு

▪️ முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்

▪️ நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி

Tamil Nadu Budget 2024

▪️ சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

Tamil Nadu Budget 2024

▪️ வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு

▪️ மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு

▪️ அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம்

▪️ 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்

▪️ கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

▪️ வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்

▪️ சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

Tamil Nadu Budget 2024

▪️ நாமக்கல்லில் ரூ.358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

▪️வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி

▪️அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

Updated On: 19 Feb 2024 8:04 AM GMT

Related News