/* */

சென்னையில் வரும் 27ம் தேதி ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு

பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில், வரும் டிசம்பா் 27 -ம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

HIGHLIGHTS

சென்னையில் வரும் 27ம் தேதி ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு
X

சென்னையில் வரும் 27ம் தேதி ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு (மாதிரி படம்) 

பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் டிசம்பா் 27 ஆம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிபிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்ளை நடத்தி வருகிறோம். கடந்த அதிமுக மற்றும் தற்போதைய திமுக ஆட்சியிலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியா்களின் கோரிக்கை நிறுவேற்றப்படும் என்றனா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

எங்களுக்கு வழங்கப்படும் ரூ.10 ஆயிரம் மாத ஊதியத்தில் அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன் டிசம்பா் 27 -ம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் போராட்டத்தின் மூலமாக தீா்வு கிடைக்காவிட்டால் வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Dec 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்