/* */

இன்று சந்திர கிரகணம்: கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்

இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதால் பல்வேறு கோவில்களில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

இன்று சந்திர கிரகணம்: கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்
X

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில் தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இன்று நள்ளிரவில் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் சந்திரன் நுழைந்தாலும், பூமியின் இருண்ட நிழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நுழையும். பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது, நாளை அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கி 02:24 மணி வரை நிகழவுள்ளது.

ஆசியா, ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிரகணம் தெரியும். டெல்லியில் இருந்து பார்த்தால் வானத்தின் தென்மேற்கு பகுதியில் கிரகணம் தெரியும்.

சூரிய கிரகணத்தை போலன்றி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. எனினும், பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது மிக தெளிவாக கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். கிரகணம் நன்றாக தெரியவேண்டுமானால், பிரகாசமான விளக்கு ஒளி இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருண்ட, ஒளி இல்லாத பகுதிகளில் சென்று பார்க்கவேண்டும்.

கோயில்களில் தரிசன நேரம் மாற்றம் :

சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு 7.05 மணி முதல் 29-ந் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்ததும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இன்று இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. நாளை வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை வழக்கம்போல் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று மாலை சாயரட்சை அர்த்தஜாமம் பூஜை முடிந்து இரவு 7 மணிக்கு பிறகு கோவில் நடை சாத்தப்படுகிறது. நாளை காலை 5.30 மணிக்கு ஆகம விதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜைகள் செய்து காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Oct 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...