/* */

குற்றாலத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை விசுத் திருவிழா

குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விசுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

HIGHLIGHTS

குற்றாலத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை விசுத் திருவிழா
X

கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்

குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விசுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததும் பிரசித்திபெற்ற தலமான குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சித்திரை விசுத் திருவிழா,மார்கழி ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பஞ்ச சபைகளில் ஒன்றான சித்தர சபையும் இங்குதான் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக மூலிகை ஓவியங்களால் வரையப்பட்ட நடராஜர்உள்ளார்.

இங்கு நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் சித்திர சபையை சுற்றியுள்ள ரத வீதிகளில் தான் நடைபெறுகின்றது.

அந்த வகையில் இன்று சித்திரை விசுத்திருநாளை முன்னிட்டு குற்றாலநாதர் சுவாமி சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, பஞ்சவாத்தியங்கள் இசையுடன் வெகு விமர்சையாக கொடியேற்றப்பட்டது.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 8ம் தேதி ஐந்தாம் திருநாளை முன்னிட்டு திருத்தேரோட்டமும், 8ம் திருளான 12ம் தேதி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சைமலர்களால் அலங்கரிகப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெறும் இவ்விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர்.

Updated On: 5 April 2024 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு