/* */

Heavy Rain Courtllam Falls Bath Restriction கனமழை தொடர்வதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

Heavy Rain Courtllam Falls Bath Restriction தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Heavy Rain Courtllam Falls Bath Restriction  கனமழை தொடர்வதால் குற்றால   அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
X

 குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain Courtallam Falls Bath Restriction

தொடரும் கனமழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.ஐந்தருவி, சிற்றருவி, குற்றாலம் பிரதான அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதியில்லாத செண்பகாதேவி அருவி மற்றும் தேனருவி என அருவிகளின் நகரமாக திகழ்கின்றது குற்றாலம்.

இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்த காலநிலையில் எங்கு உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதமான தென்றல் காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெள்ளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் பருவ நிலை காலங்களில் அருவிகளில் போதிய தண்ணீர் விழவில்லை.இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தென்காசி,குற்றாலம்,கடையம், கடையநல்லூர், புளியங்குடி மற்றும் சிவகிரி ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.

மேலும் வெள்ளப்பெருக்கு குறையாததால் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாட்களாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதமான கால நிலவி வருகிறது.

Updated On: 3 Nov 2023 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு