/* */

வெறி நாயை கட்டுப்படுத்த நூதன முறையில் நகர்மன்ற கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்..!

தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் நாய் முகமூடி அணிந்து னு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

வெறி நாயை கட்டுப்படுத்த நூதன முறையில் நகர்மன்ற கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்..!
X

நாய் முகமூடி அணிந்து வந்த நகர்மன்ற உறுப்பினரை படத்தில் காணலாம்

தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த வலியுறுத்தி நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் நாய் முகமூடி அணிந்து மன்ற தலைவரிடம் குரைத்து மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 33 வார்டு பகுதிகளில் இருந்தும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்டத்தில் மன்ற பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான கொடிமரம், மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் தொந்தரவு அதிகரித்து காணப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் வகையில் 20 வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் முகமது ரபிக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, தொடர்ந்து பொதுமக்கள் சாலைகளில் சுதந்திரமாக செல்ல முடியாத நிலையில் அச்சத்தோடு நடந்து வருகின்றனர்.

இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருவது வேதனை தெரிவிப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாய் முகமுடியுடன் நாய் குறைக்கும் சத்தத்தை எழுப்பி நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

Updated On: 17 Feb 2024 7:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!