/* */

New Playground Construction Boomi Pooja 15 கோடியில் விளையாட்டு வளாகத்திற்கான பூமி பூஜை :கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

New Playground Construction Boomi Pooja தென்காசி அருகே உள்ள பாட்டாக்குறிச்சியில் ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

HIGHLIGHTS

New Playground Construction Boomi Pooja  15 கோடியில் விளையாட்டு வளாகத்திற்கான  பூமி பூஜை :கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு
X

தென்காசி அருகே பாட்டாக்குறிச்சியில் ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம் - பூமி பூஜை - மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

New Playground Construction Boomi Pooja

தென்காசி மாவட்டத்திற்கான மாவட்ட விளையாட்டு வளாகம் அமைப்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தென்காசி அருகே உள்ள பாட்டாக்குறிச்சி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதற்கான அடிக்கல் நாட்டும் பணியை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதேபோன்று பாட்டாக்குறிச்சி மலை பரம்பில் சுமார் 17 ஏக்கரில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைய இருக்கும் இடத்தில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

New Playground Construction Boomi Pooja


தென்காசியில் நடைபெற்ற பூமி பூஜையில் மாவட்ட ஆட்சியர் துறை ரவிச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டனர்.

இந்த பூமி பூஜையைமாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன், பழனி நாடார் MLA ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தமிழ் செல்வி, துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் சாதீர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Nov 2023 5:53 AM GMT

Related News