/* */

தென்காசி மாவட்டத்தில் மழையால் 21,222 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் தகவல்

Tenkasi District Heavy Rain தென்காசி மாவட்டத்தில் இதுவரை 21,222 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் மழையால் 21,222 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Tenkasi District Heavy Rain

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டியளித்தார் .கடந்த 2 தினங்களில் பெய்த மழை காரணமாக 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையும், தூத்துக்குடியும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அரசு அதிகாரிகள் மூலம் தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தென்காசி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் உயிர் சேதம் இல்லை. மாவட்டத்தில் 2 கால்நடைகள் (ஆடுகள்) மட்டுமே உயிரிழந்துள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தமட்டில் மிகுந்த சேதம் என்பது பயிர் சேதம் மட்டும் தான். நேற்று வரை 3,009 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களும், 4200 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காசோள பயிர்களும், உளுந்து உள்ளிட்ட பயிர்வகைகள் பயிரிடப்பட்டுள்ள 13,800 ஏக்கர் விவசாய நிலங்களும், மொத்தமாக தென்காசி மாவட்டத்தில் 21,222 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.

மேலும், மத்திய குழு சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் போது பாதிப்புகள் குறித்து முறையிட்டு மத்திய அரசிடம் தேவையான நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 625 பேரிடர் மீட்பு படையினரும், 220 பயிற்சி பெற்ற காவலர்களும், 168 பேர் முப்படை வீரர்களும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 6 ஹெலிக்காப்டர்கள் இந்த மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் 83 வீடுகள் பாதிப்பு குள்ளாகியுள்ளது.மேலும், மீட்பு பணிகள் 4 மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேதம் குறித்தும் முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, இறுதி சேதமதிப்பு முறையாக மத்திய குழுவிடம் சமர்பணம் செய்து தேவையான நிதி பெற்று பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சென்னை போல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என பேசினார்.

Updated On: 19 Dec 2023 7:55 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்