/* */

தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் அதிகாரியிடம் வாக்குவாதம்;பரபரப்பு

Tenkasi Municipal Vice President Argument தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் அதிகாரியிடம் வாக்குவாதம்;பரபரப்பு
X

 அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா .

Tenkasi Municipal Vice President Argument


தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகரத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த கூட்டத்தில் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் தென்காசி மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் மாவட்ட விளையாட்டு மையம் அமைய உள்ளது. அதனை காட்டுப்பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கொண்டு சென்றதாக கூறி பாஜக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைக் கண்டிக்கும் வகையில் இந்த கூட்டத்தில் முன்னாள் நகரத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான காதர் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட விளையாட்டு மையத்திற்கு இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கியது தமிழக அரசின் செயலாளர்கள்,மற்றும் மாவட்ட ஆட்சியர் இது சட்டமன்ற உறுப்பினர் நிதி கிடையாது. தனது தொகுதியில் அமைவதால் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்று உள்ளார். என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர்மன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் சுப்பையா புதிய பேருந்து நிலையத்தில் அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதனை அகற்ற கோரி இரண்டு மாதத்திற்கு முன்பே கூறி உள்ளேன். இதுவரை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து வாடுகளிலும் தெருவிளக்குகள் சரிவர தெரியவில்லை என்று அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு மாடு,நாய்கள் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 30 Dec 2023 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்