/* */

Tenkasi Municipality Members Agitation இஸ்ரேல் போரைக் கண்டித்து தென்காசி நகர மன்றத்தில் ஆர்ப்பாட்டம்

Tenkasi Municipality Members Agitation இஸ்ரேலில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என உயிரைக் காவு வாங்குவதைக் கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் உருவபொம்மையுடன் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்செய்தனர்.

HIGHLIGHTS

Tenkasi Municipality  Members Agitation  இஸ்ரேல் போரைக் கண்டித்து   தென்காசி நகர மன்றத்தில் ஆர்ப்பாட்டம்
X

இஸ்ரேல் போரை கண்டித்து இறந்த குழந்தைகளின் உருவ பொம்மையோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகரமன்ற உறுப்பினர்கள்

Tenkasi Municipality Members Agitation

தென்காசி நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து வார்டு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தின் போது இஸ்ரேல் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ரபீக் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் அரசை கண்டித்தும் இறந்த குழந்தைகளை நினைவு கூறும் விதமாக உருவ பொம்மை வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

க்



மேலும் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் காணப்படும் வாறுகால்களை தூர் வார கோரி 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா மணல், கற்களை தலையில் சுமந்தபடி கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட கழிவுகள் வாய்க்கால்களில் கொட்டப்படுவதால், கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால், போர்க்கால அடிப்படையில் வாறுகால்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 23-வது வார்டு உறுப்பினர் சுனிதா தங்களது வார்டு பகுதியில் அமைதுள்ள ஜமாலியா நகர் பகுதியில் அமைக்க பட்ட தரமற்ற சாலையை சீர் செய்து தர வேண்டும். மாவட்ட ஆட்சியரால் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தொடர்ந்து கூட்டத்தில் நகரத்தில் வளர்ச்சிப் பணிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Updated On: 11 Nov 2023 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு