/* */

ஊராட்சி செயலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்குஅரசுதுறை பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் வழங்க வலியுறுத்தல்

HIGHLIGHTS

ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்
X

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் சங்க மாநிலத் தலைவர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி செயலாளர்களுக்குஅரசுதுறை பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் வழங்க வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் சங்க மாநிலத் தலைவர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வை.தர்மராஜா நடைபெற்ற பணிகள் குறித்து வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் ப.செந்தில் குமார் நிதி அறிக்கை தாக்கல் செய்தார் .மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ப.குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநிலத் தலைவர் க.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் குரு.செல்வமணி, திருவாரூர் மாவட்ட தலைவர் என்.ராம்குமார், மாவட்ட செயலாளர் பி.கருப்பையன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மதுரை பி.சந்திரசேகரன், கடலூர் முருகன் திருவாரூர் குரு. செல்வமணி புதுக்கோட்டை சி.சுவாமிநாதன், திருவாரூர் ஆர்.சங்கர் உள்ளிட்டர் பங்கேற்றதனர் முன்னதாக சங்க மாநில பிரசார செயலாளர் டி.முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார், முடிவில் மாவட்ட பொருளாளர் பி.பிரஷ்நேவ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஊராட்சி செயலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவதுடன், தற்போது பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியம் பெற்ற வருகின்றனர். இவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலகங்களில் பணி புரிகின்ற பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இதை வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூபாய் 15,000ம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை பணிக்கொடை தொகை வழங்கியது இல்லை. எனவே தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி பணி ஓய்வு பெறுகின்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பணிக்கொடை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Updated On: 31 Dec 2023 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு