/* */

800 கோடியை தாண்டிய உலக மக்கள் தொகை: எத்தனையாவது இடத்தில் சென்னை?

உலக மக்கள் தொகையில் தற்போது சென்னை 1.17 கோடி மக்களுடன் 26வது இடத்தில் உள்ளது.

HIGHLIGHTS

800 கோடியை தாண்டிய உலக மக்கள் தொகை: எத்தனையாவது இடத்தில் சென்னை?
X

பைல் படம்

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பர் மாதத்தில் 800 கோடியைக் கடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் கடந்த ஆண்டு நவம்பாிலேயே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள்தொகை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வயது 32ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060ம் ஆண்டு அது 39ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 1960 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் இரு மடங்காக இருந்தது. ஆனால், தற்போது அது குறைந்துள்ளது.

அதேபோல் பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது, கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்.

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: 0.9% வருடாந்திர மாற்றம் (2021)

கருவுறுதல் விகிதம்: ஒரு பெண்ணுக்கு 2.30 பிறப்புகள் (2020)

அமெரிக்கா: 33.19 கோடி (2021)

சீனா: 141.24 கோடி (2021)

இந்தியா: 140.76 கோடி (2021)

மக்கள்தொகை அடிப்படையில் முதல் 20 பெரிய நாடுகள் (Live)

1 இந்தியா: 1,433,391,627

2 சீனா: 1,425,491,577

3 அமெரிக்கா: 340,658,839

4 இந்தோனேசியா: 278,358,177

5 பாகிஸ்தான்: 242,199,028

6 நைஜீரியா: 225,741,536

7 பிரேசில்: 216,865,000

8 பங்களாதேஷ்:173,589,788

9 ரஷ்யா: 144,266,343

10 மெக்சிகோ:128,795,233

11 எத்தியோப்பியா:127,682,964

12 ஜப்பான்: 123,052,117

13 பிலிப்பைன்ஸ்: 117,979,821

14 எகிப்து: 113,358,492

15 டி.ஆர். காங்கோ: 103,477,245

16 வியட்நாம்: 99,091,568

17 ஈரான்: 89,404,710

18 துருக்கி: 85,978,044

19 ஜெர்மனி: 83,279,245

20 தாய்லாந்து: 71,832,112

மக்கள் தொகை பட்டியலில்ஜப்பான் நாட்டின் டோக்கியோ 3,71,94,105 ஆக முதலிடத்தில் உள்ளது. டெல்லி 3,29,41,309 மக்கள் தொகையுடன் 2ம் இடத்திலும், சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 மக்களுடன் 3ம் இடத்திலும் உள்ளன. 2,12,96,517 மக்களுடன் மும்பை 9வது இடத்திலும், 1,53,32,793 மக்களுடன் கொல்கத்தா 17வது இடத்திலும், 1,36,07,800 மக்களுடன் பெங்களூரு 23வது இடத்திலும், 1,17,76,147 மக்களுடன் சென்னை 26வது இடத்திலும் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Nov 2023 7:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு