தலைவர்களுக்கு நிம்மதி பிரச்சாரம் செய்யப்போகுது ஏஐ

AI Election Campaign
தேர்தல் வந்து விட்டாலே அரசியல் கட்சி தலைவர்களின் பாடு படு திண்டாட்டம் தான். தொடர்ச்சியாக 30 நாட்களுக்கும் மேல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அகில இந்திய அளவிலான தலைவர்கள் 45 முதல் 50 நாட்கள் வரை கூட பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து இடங்களில் பேச வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி புதுப்புது விஷயங்களை பேச வேண்டும். இதனால் தொண்டை கட்டி பல்வேறு சிக்கல்களில் தலைவர்கள் சிக்குவார்கள். பல இடங்களில் பேச முடியாமல், கை அசைத்து செல்லும் நிலை கூட ஏற்படும்.
AI Election Campaign
இது போன்ற சிக்கல்களை இந்த முறை ஏஐ தொழில்நுட்பம் தீர்த்து வைத்து விடும். ஆமாம். எந்தெந்த இடத்தில் என்னென்ன பேச வேண்டும் என்பதை டெக்ஸ்ட் மெசேஜ் ஆக எழுதியோ, டைப் செய்தோ ஏஐயிடம் கொடுத்து விட்டால், அந்த தலைவர் குரலில், அதே மாடுலேசனில் ஏஐ பிரச்சாரம் செய்து விடும். தலைவர்கள் நின்று கொண்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதும். அதாவது பேசுவது போல் போஸ் கொடுத்தால் போதும். ஏஐ எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.
இப்போதே இந்த தொழில்நுட்பங்களில் பிரச்சார உரைகள் தயாராகி வருகின்றன. இதில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும். அப்படி எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டால் எப்படி கையாள்வது என்பது குறித்து பல்வேறு தரவுகள் சேர்க்கப்பட்டு, ஏஐ நுட்பத்தில் இதனை கையாளும் வகையில் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இந்த முறை தலைவர்களின் பிரச்சார சுமைகள் குறைந்து விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu