/* */

செப்டிக் டேங்க் கழிவுகளை கண்ட இடத்தில் கொட்ட தடை..!

மாவட்டம் முழுவதும் செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையம் தவிர்த்து மற்ற இடங்களில் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செப்டிக் டேங்க் கழிவுகளை கண்ட இடத்தில் கொட்ட தடை..!
X

செப்டிக் டேங்கர் லாரி (கோப்பு படம்)

மாவட்டம் முழுவதும் செப்டிக் டேங்க் கழிவுகளை தற்போது தனியார் லாரிகள் மூலம் எடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உருவாகிறது. தவிர துர்நாற்றமும் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த செப்டிக் டேங்க் கழிவுகள் மழை நீருடன் கலந்து ஆற்று நீரில் கலக்கிறது.

இதனைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு லாரி உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினர். இ்ந்த கூட்டத்தில் செப்டிக் டேங்க் கழிவுகளை எந்த உள்்ளாட்சியில் எங்கு கொட்ட வேண்டும் என இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

அந்த இடம் தவிர்த்து மற்ற இடங்களில் கொட்டினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இருந்து வந்து மருத்துவக் கழிவுகளை யாராவது தேனி மாவட்டத்தில் கொட்டினால் அவர்கள் மீது போலீசில் புகார்் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 14 Dec 2023 6:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!