/* */

நள்ளிரவில் எம்.ஜி.ஆரை பார்த்து வியந்த சினிமா ஊழியர்கள்

Cinema Staff Amazed MGR படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற்காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம்.

HIGHLIGHTS

Cinema Staff Amazed MGR

ஒளிவிளக்கு' படத்தில் ஒரு சிறப்பு. எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற்காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில் ‘தைரிய மாக சொல் நீ மனிதன் தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக மாறி ஆக மொத்தம் மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சி வரும். அந்த காட்சியில் தியேட்டர்களே இரண்டு படும்.

Cinema Staff Amazed MGR


இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில் நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலைகளை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவருமான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர் தான் இயக்கினார்.

பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

Cinema Staff Amazed MGR


சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’ பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்த போது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

Updated On: 10 March 2024 7:16 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...