/* */

தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி

தேனி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என இந்து எழுச்சி முன்னணி புகார் எழுப்பி உள்ளது.

HIGHLIGHTS

தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
X
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் நடந்த வாரவழிபாட்டு கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பையா ஜீ முன்னிலை வைத்தார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஜீ முன்னிலை வகித்தார். இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். இரவி ஜீ, மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ உட்பட பலர் பங்கேற்று வழி நடத்தினர்.

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் (1): இந்து இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாக பாரத தேசத்தின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் போக்கை பற்றியும், சிறுபான்மையினரின் மக்கள் தொகை பெருக்கத்தின் ஆபத்தை பற்றியும் கூறிய கூற்று தற்போது உண்மையாகி உள்ளது. இந்நிலை நீடித்தால் இந்துக்கள் சிறுபான்மையாகி விடக்கூடிய சூழ்நிலை உருவாகி பாரத முழுவதும் இந்து கலாச்சாரம், பாரம்பரியம் பண்பாடு இவைகள் மிகப்பெரிய ஆபத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும் என்பதால் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் கையில் இந்த தேசத்தின் ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என ஒவ்வொரு பாரதியனும் சங்கல்பம் எடுத்துக்கொண்டு இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி அனைத்து இந்துக்களையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் (2): தேனி நகராட்சியின் மூலம் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படுவது இல்லை. மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பைகள் வீடு, வீடாக சென்று சேகரிக்கப்படுகிறது. அப்படி் சேகரிக்கப்படும் குப்பைகள் யாவும் ஒரு ஒழுங்கில்லாமல் நான்கு வழிச்சாலை, குளம், குட்டைகள் குடியிருப்பை ஒட்டிய பகுதிகள், கோவில்களை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டப்படுகிறது இந்த செயல் சுகாதார கேட்டை ஏற்படுத்துவதோடு உடல் பலவீனமானவர்களுக்கு உயிருக்கு உத்திரவாதம் அற்ற நிலைமையையும் ஏற்படுத்துவதால் உடனே நகராட்சி நிர்வாகம் குப்பைகளையும் கழிவுகளையும் சரியான முறையில் கையாண்டு சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டுமாய் நகராட்சி நிர்வாகத்தை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் ( 3): இன்று சனாதன தர்மத்தின் உயிர்ப்பும் அத்வைதத்தின் அடிநாதமுமான ஆதிசங்கரபகவத் ஜெயந்தி தினத்தில் ஆதிசங்கரரையும் அவர் ஆற்றிய ஆன்மீக பணிகளையும் நினைவு கூறப்பட்டு, இந்து மதம் செழித்து வளர வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Updated On: 13 May 2024 5:37 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அடி வாங்கிய அண்ணாமலை சொன்னதன் அர்த்தம் என்ன?
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. இந்தியா
    மூன்று நிகழ்ச்சிகளில் ஒரே உடையில் காணப்பட்ட மோடி!
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. காஞ்சிபுரம்
    பிரம்மோற்சவ விழாவில் திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீ வைகுண்டபெருமாள்
  8. வேலைவாய்ப்பு
    மீன்வளத்துறையில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
  9. திருவண்ணாமலை
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஆர்ப்பாட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 308.20 மி.மீ மழை பதிவு