/* */

தேனி மக்கள் சேவை மையத்தில் மனிதநேய கண்காட்சி..!

தேனியில் மனிதநேயம் மலர பள்ளி, கல்லுாரி மாணவிகள் சார்பில் கண்காட்சி மக்கள் சேவை மையத்தில் நடந்தது.

HIGHLIGHTS

தேனி மக்கள் சேவை மையத்தில் மனிதநேய கண்காட்சி..!
X

தேனி மக்கள் சேவை மையத்தில் நடந்த மனிதநேய கண்காட்சியில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் (நடுவில் மைக் பிடித்து பேசுபவர்) பேசினார்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி கிளை மகளிரணி மற்றும் GIO சார்பில் "மனிதநேயம் மலர " என்கிற மையக்கருத்தில் கண்காட்சி தேனி மக்கள் சேவை மையத்தில் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய கண்காட்சி மாலை 4 மணி வரை நடைபெற்றது. பள்ளி கல்லூரி மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் அரங்குகளை அமைத்து பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினர்.

தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தென்னிந்திய தலைவர் சுபேதார் மகாராஜன் தலைமை வகித்தார். JIH மகளிர் அணி நிர்வாகி லைலா வரவேற்றார். அரசு ஆயுர்வேத மருத்துவரும் உளவியல் நிபுணருமான பிரித்தா நிலா கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார்.

தொழிலதிபரும் அரிமா சங்க பிரமுகருமான குலோத்துங்கன், வெல்ஃபேர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, நேசம் மக்கள் சேவை மைய தலைவர் காதர் பிச்சை, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி கிளை தலைவர் அபுதாஹிர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக ஆய்வாளரும் பொறியாளருமான பொன்முடி, பிசி பட்டி அன்னை தெரசா ஆங்கிலப்பள்ளி தாளாளர் தேவகுமார், சமூக நல்லிணக்கப் பேரவை பொருளாளர் குழந்தைராஜ், ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நீலக்கண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கண்காட்சி நிறைவு நிகழ்வில் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜோசப் சேவியர், தேனி புது பள்ளிவாசல் ஜமாத் துணை தலைவர் ஹபிபுல்லா மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் மாணவிகளை பாராட்டி நிறைவுரையாற்றினார். JIH மகளிரனி நிர்வாகி பஃரிதா நன்றி தெரிவித்தார்.

Updated On: 13 Feb 2024 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...